Categories
தேசிய செய்திகள் பல்சுவை வைரல்

வேற லெவல்! “என்ஜாய் எஞ்சாமி” பாடலை பாடி அசத்தும் குழந்தை…. 1 வாரத்தில் 11 லட்சம் பார்வையாளர்கள்…!!!

பொதுவாக நம்முடைய வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாக இருக்கும்.  எப்போதும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். குழந்தைகள் எவ்வளவு சேட்டை செய்தாலும் அது ஒரு சில நேரத்தில் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் நாம் எவ்வளவு கவலை அல்லது மன அழுத்தத்திலும் இருந்தாலும் கூட குழந்தைகள் செய்யும் சேட்டையும், குறும்புத்தனத்தையும்பார்த்தாலே கவலை எல்லாம் மறந்துவிடும். அதேபோல ஒரு சின்ன குழந்தை பாடுவதை கேட்டால் எப்படி இருக்கும். அதை அப்படியே ரசிப்போம்.

அந்தவகையில் இங்கு ஒரு வீடியோவில் 5 வயது குழந்தை ஒன்று “என்ஜாய் எஞ்சாமி ” பாடலை அழகாக முழு பாடலையும் பாடுகிறது. இந்த பாடல் இணையத்தில் வெளியாகி ஒரே வாரத்தில் 11 லட்சம்  பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதையடுத்து இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |