ஐ.நா. வில் சிறப்பு அறிக்கையாளராக பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக இந்தியாவை சேர்ந்த அஸ்வினி கே.பி. என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்.
தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட 6-வது நபர் மற்றும் ஆசியாவை சேர்ந்த முதல் நபர் ஆகிய பெருமைகளை அஸ்வினி கே.பி. பெற்றுள்ளார். இந்த நிலையில் இதுவரை நியமிக்கப்பட்ட அனைவரும் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.