கடந்த வாரம் நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவை 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து இவர் பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். கடந்த வாரம் நடிகர் சிம்பு கிச்சனில் ஜாலியாக சமைக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
#10MviewsInstaIndiaClub No.1 in Chennai Trends List 🔥#SilambarasanTR #Maanaadu @SilambarasanTR_ pic.twitter.com/sVC9lKjSdI
— Silambarasan TR 360° (@STR_360) July 7, 2021
அந்த வீடியோவில் நடிகர் சிம்பு செம ஸ்மார்ட் லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சிம்பு வெளியிட்ட இந்த வீடியோ 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரே வாரத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு இந்திய நடிகரின் பதிவு 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.