Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் கூட்டணி…. களமிறங்கும் இயக்குனர் அமீர்…. வெளியான தகவல்….!!!

இயக்குனர் அமீர் “இறைவன் மிகப் பெரியவன்” என்ற படத்தை வெற்றிமாறனுடன் இணைந்து இயக்க உள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஆவார்.  ஆடுகளம் என்ற படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுகளை பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர். இவர் மௌனம் பேசியதே என்ற படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையை 9 ஆண்டுகள் கழித்து “இறைவன் மிகப் பெரியவன்” என்ற பெயரில் இயக்கவுள்ளார், அமீர்.

இந்த படத்தை JSM Pictures  சார்பில் ஜாஃபர்  தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா நடைபெற்றபோது படக்குழுவினர் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் பேசிய அமீர், இது என்னுடைய விழா. பொதுவாக ஒரு படம் வெறும் ஸ்கிரிப்டை வைத்து பூஜை போடுவோம் .ஆனால் இந்த விழா அப்படி இல்லை. இது ஒரு படத்தின் அறிமுகவிழா எனவும்  நானும் வெற்றியும் சேர்ந்து தினமும் ஒரு ப்ராஜக்ட் பற்றி பேசிக்கொண்டு இருப்போம். அந்த நிலையில் வேறு படங்கள் நான் செய்வதாக இருந்த நிலையில் இந்த படத்தை இந்த கதையை செய்யலாம் என தோன்றிய உடனே வெற்றிடம் கூறினேன், அவரும் கண்டிப்பாக செய்யலாம் என்றார்.

இந்த படத்தில் கரு பழனியப்பன்  நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் எங்களுக்குள் இருக்கும் அழகான உறவை அறியலாம்.  இதனையடுத்து பேசிய  இயக்குனர் வெற்றிமாறன்,  ரொம்ப நாள் முன்னாடி தங்கம் இந்த கதையை பற்றி சொன்னார். அதன் பின் 2 பேரும் வேறு வேறு வேலைகள் செய்ய ஆரம்பித்துவிட்டோம். பிறகு ஒரு சமயத்தில் இந்த கதையை எடுக்கலாம் என தோன்றியது. இந்த படத்திற்கு திரைக்கதையினை நானே எழுதி முடித்து விட்டேன்.

ஆனால் கதை எழுதும்போது அமீரிடம் சில விஷயங்களை விவாதிப்பேன். இந்த காலத்திற்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்களை மாற்றினேன். நான் எடுக்கவில்லை என்ற நிலை வந்தபோது அமீர் நான் எடுக்கட்டுமா என்றார். அவர் எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. அமீர்  திரைக்கதையில் சில மாற்றங்களை அவர் வாழ்வியலில் இருந்து எடுத்து வந்துள்ளார். இன்றைய காலகட்ட பிரச்சினையை, சரியான விஷயங்களை சொல்ல வேண்டும் என்பது தான் நாங்கள் இருவரும் இணைந்து வேலை செய்ய காரணமாகும் நன்றி எனக் கூறி முடித்தார்.

Categories

Tech |