Categories
உலக செய்திகள்

வேற லெவல்…. கையில் கண்ணிவெடி! வாயில் சிகரெட்! மாஸ் காட்டிய உக்ரைனியர்…. வைரலாகும் வீடியோ….!!

உக்ரைனில் ஒருவர் கண்ணிவெடியை தன் கைகளால் அகற்றிய படி வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் மக்கள் மற்றும் வீரர்கள் அவர்களது தைரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல வீடியோக்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனிய மனிதர் ஒருவர் எந்த ஒரு பயமும் இன்றி சிகரெட் புடித்தபடி ஒரு பாலத்தில் இருந்து கண்ணிவெடியை தன் கைகளால் அகற்றி வீசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அந்த நபர் உக்ரைனின் தேட்டியல்ஸ் பகுதியில் உள்ள சாலையில் கிடந்த கண்ணிவெடியை வெடிகுண்டு நிபுணர்கள் வரும் வரை காத்திருக்காமல் அந்த அபாய வெடிபொருளை கையில் ஏந்தி யாருமில்லா இடத்திற்கு எடுத்துச் சென்றார். மேலும் அவர் யாரும் எதிர்பாராத விதத்தில் ஸ்டைலாக வாயில் சிகரெட் வைத்தபடி புகை பிடித்துக் கொண்டே வெடியை தூக்கி சென்றார்.

Categories

Tech |