Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேற லெவல் சார் நீங்க..! ‘மன்கட்டை தவிர்க்க இப்படியும் பண்ணலாமோ…. புது ரூட் எடுத்த நியூசிலாந்து வீரர்… வைரல் வீடியோ.!!

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ‘மன்கட்’ விக்கெட்டை தவிர்க்க வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் உள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆன போதிலும், க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 104 ரன்கள் குவித்தார்.

இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழந்து 167 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 க்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யும் போது சதம் அடித்திருந்த பிலிப்ஸ் ‘மன்கட்’ விக்கெட்டை தவிர்க்க வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். அதாவது ஆட்டத்தின் 19 ஆவது ஓவரின் 3 ஆவது பந்தை வீச லகிரு குமாரா சான்ட்னருக்கு வீச ஓடிவரும் போது நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் உட்கார்ந்திருந்து ஓட்டப்பந்தயத்திற்கு தயாராவது போல் பிலிப்ஸ் பேட்டை வலது கையால் பிடித்து தரையோடு வைத்து கோட்டுக்குள் கால் வைத்தபடி நின்றார்.

பந்தை அவர் போட்டதும் பிலிப்ஸ் வேகமாக ஓட ஆரம்பித்தார். இவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் மன்கட்டை தவிர்க்க இப்படியும் செய்யலாம் போலயே என்று பாராட்டியும், கிண்டலாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் இவரது செயல் கவர்ந்துள்ளது.

Categories

Tech |