Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… சிம்புவின் ‘மாங்கல்யம்’ பாடல் செய்த டக்கரான சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் பாடல் யூடியூபில் 150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் ஈஸ்வரன். கடந்த பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சுசீந்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா, முனீஷ்காந்த், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் .

மாதவ் மீடியா ஒர்க்ஸ் மற்றும் டி கம்பெனி இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்பு பாடிய மாங்கல்யம் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இந்நிலையில் மாங்கல்யம் பாடல் யூ டியூபில் 150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |