சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாலா, ரித்திகா இருவரும் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த குக் வித் கோமாளி-2 நிகழ்ச்சி சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இதையடுத்து குக் வித் கோமாளி-2 கொண்டாட்டம் நிகழ்ச்சி எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்படி இந்த வாரம் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியுடன் இணைந்து குக் வித் கோமாளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
Vera level.. vera level! 🔥
சூப்பர் சிங்கர் – இன்று மற்றும் நாளை இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #SuperSinger #VijayTelevision pic.twitter.com/NNyfy5DhI4
— Vijay Television (@vijaytelevision) May 8, 2021
இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாலா மற்றும் ரித்திகா இருவரும் இணைந்து ஈஸ்வரன் படத்தின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.