சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 23) சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் நேற்று மாலை சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியானது.
Here is #EtharkkumThunindhavan second look!@Suriya_offl @pandiraj_dir @immancomposer @RathnaveluDop @priyankaamohan @sooriofficial
#EtharkkumThunindhavanSecondLook #ETsecondlook #ET #எதற்கும்துணிந்தவன் pic.twitter.com/mczO78GY7B— Sun Pictures (@sunpictures) July 22, 2021
அதன்படி இந்த படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு எதற்கும் துணிந்தவன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சூர்யா கையில் ரத்தக் கறையுடன் இருக்கும் வாளை பிடித்து கொண்டு ஆக்ரோஷமாக அமர்ந்திருக்கிறார். தற்போது இந்த அட்டகாசமான செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.