நடிகர் தனுஷின் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் நடிகர் தனுஷ் D43, ஆயிரத்தில் ஒருவன் 2, நானே வருவேன் உள்ளிட்ட ஏராளமான திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
Blockbuster Hero – Awards' Favorite Actor @dhanushkraja during #TheGrayMan shoot at California. Nice pics! #Dhanush pic.twitter.com/ukap1tfGt0
— Kaushik LM (@LMKMovieManiac) April 26, 2021
தற்போது தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் தனுஷ் வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.