Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… தளபதி பிறந்தநாளை முன்னிட்டு ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் வெளியிட்ட போஸ்டர்…!!!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் பட தயாரிப்பாளர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் விஜய் இதுவரை நடித்த 64 படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |