பிரபல நடிகை அனுஷ்கா சர்மா தனது புதிய திரைப்படத்திற்கான லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா சர்மா. இவர் தற்பொழுது பிரபல கிரிக்கெட் அணியின் கேப்டன் கதையை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் நடிக்கவிருகிறார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் 2008-ஆம் ஆண்டிலிருந்து 11ம் ஆண்டு வரை அணியின் கேப்டனாக இருந்தவர் ஜுலன் கோஸ்வமி. இவருக்கு இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியதற்காக அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
Grip by grip 💙🏏#prep #ChakdaXpress@NetflixIndia @JhulanG10 @OfficialCSFilmz @prosit_roy #KarneshSsharma pic.twitter.com/IyDDfWGQH0
— Anushka Sharma (@AnushkaSharma) February 25, 2022
இதனை தொடர்ந்து அனுஷ்கா சர்மா இப்படத்திற்கு தயாராகும் விதமாக பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் அனுஷ்கா சர்மா பந்து வீச்சு பயிற்சி மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.