மதுவை நூதன முறையில் கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் மதுவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு மதுவிலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சட்டத்தை மீறி மது அருந்தி தினம்தோறும் ஏராளமானோர் கைது செய்யப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1.27 லட்சம் பேர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் தனது உடலில் செல்லோ டேப்பைப் பொருத்தி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் இருந்து மது பாட்டில்களை கடத்திச் சென்றுள்ளார்.
அப்போது அவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 20 நாட்டு மதுபான பாட்டில்களை தனது சொந்த மாநிலமான பீகாரருக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை கைப்பற்றினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.