Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… நடுக்கடலில் தனுஷ் ரசிகர்கள் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!!

புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் படகில் சென்று கர்ணன் பட கட்டவுட் வைத்துள்ளனர் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா, லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நாளை அதாவது ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்தது . இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்த தயாரிப்பாளர் தாணு நாளை கர்ணன் படம் வெளியாவதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில் புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் படகில் சென்று கர்ணன் பட கட் அவுட் வைத்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |