பாலியல் குற்றங்களுக்கு எதிராக களமிறங்க இருப்பதாக யாமி கவுதம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகை யாமி கவுதம். இவர் ஜெய் நடித்த தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து மக்களிடையே பிரபலமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான கவுரவம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இந்நிலையில் யாமி கௌதம் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க உள்ளார்.
இவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இருப்பதாக கூறியுள்ளார். இதுபற்றி யாமி கவுதம் கூறியுள்ளதாவது தற்போது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான சூழ்நிலையே நிலவி வருகின்றது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதாக முடிவெடுத்துள்ளேன். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்கு தொண்டு செய்யும் இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து நான் செயல்பட உள்ளேன். இது ஆரம்பம்தான். பெண்களுக்கான பல உதவிகள் இன்னும் தேவைப்படுகின்றது என கூறியுள்ளார்.