பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். பிக் பாஸ் சீசன் 5 கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளராக ராஜூ ஜெயமோகன் அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் மீண்டும் புதிய கண்ணோட்டத்துடன் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிள்ஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டனர். அதன்படி அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியலை தினமும் வெளியிட்டு வந்தனர்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்கள். இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள்: பிக் பாஸ் சீசன் 1 னில் இருந்து ஜூலி, சினேகன் ஆகியோர், பிக் பாஸ் சீசன் 2 வில் இருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி ஆகியோர், பிக் பாஸ் சீசன் 3 யில் வனிதா விஜயகுமார் மற்றும் அபிராமி, பிக் பாஸ் சீசன் 4 ரில் சுரேஷ், அனிதா சம்பத் மற்றும் பாலாஜி, பிக் பாஸ் சீசன் 5 வில் அபிநய், நிரூப், தாமரைச்செல்வி மற்றும் சுருதி ஆகியோர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர்.