நடிகை மாளவிகா மோகனன் ராயல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார் . இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்த மாளவிகா முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தற்போது இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Fridays are for riding 🏍🖤#EnfieldLoverForLife pic.twitter.com/Dc2PGPofc4
— Malavika Mohanan (@MalavikaM_) April 9, 2021
மேலும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் ராயல் என்ஃபீல்ட் பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு தற்போது ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.