Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டி அசத்திய கீர்த்தி பாண்டியன்… வைரல் வீடியோ…!!!

நடிகை கீர்த்தி பாண்டியன் ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இதை தொடர்ந்து இவர் தனது தந்தையும் நடிகருமான அருண் பாண்டியனுடன் இணைந்து அன்பிற்கினியாள் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் . மேலும் அவ்வப்போது நடிகை கீர்த்தி பாண்டியன் தனது அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் அசத்தலாக ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பைக்கை ஓட்டிக்கொண்டு இருக்கும்போது ஒரு கட்டத்தில் நின்றுகொண்டே ஓட்டுவதும், ஒரு கையை எடுத்து விட்டு ஓட்டுவதுமாக மாஸ் காட்டுகிறார். தற்போது ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |