Categories
உலகசெய்திகள்

வேற லெவல் ரியாக்ஷன்….!! முதன்முறையாக இந்திய உணவை டெஸ்ட் செய்த ஆஸ்திரேலியா சிறுமி….!!!!!

இந்திய முறைப்படி தயார் செய்த உணவை சுவைத்து பார்த்த ஆஸ்திரேலிய சிறுமியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் இருக்கின்ற  பல்வேறு வகையான நில அமைப்புகள், வேறுபட்ட மொழிகள், கலாச்சாரங்கள், உணவு பழக்கவழக்கங்கள் போன்றவை காரணமாக  இந்தியாவை துணைக்கண்டம் என்று அழைக்கின்றனர். இவை எல்லாம் தாண்டி பொதுவாக நாம் இந்தியர் என்று அடையாளப் படுத்தப்படுவது போல் நம்மிடையே நமது உணவு பழக்க வழக்கங்களும்  பொதுவாக இருக்கிறது. இந்தியர்கள் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை உள்ள மக்கள் அனைவரும் மசாலா பிரியர்களோகவே இருக்கின்றனர்.

அதேபோல, அனைத்து உணவு பொருட்களையும் காரத்துடன் சமைத்து சாப்பிட்டே பழகிய நம்மால் பிற நாடுகளின் உணவுகளை ஏற்றுக்கொள்வது மிகுந்த சவாலான காரியமாகிவிடுகிறது. இதனாலேயே, பூமியில் எந்த நாட்டிற்கு சென்றாலும் இந்தியர்கள் நம்முடைய நாட்டினர் யாராவது உணவகம் வைத்திருக்கிறார்களா எனத் தேடித் தொடங்கிவிடுகின்றனர்.

இது ஒரு பக்கம் என்றால், வெளிநாட்டினர் நம்முடைய காரமான உணவுகளை சாப்பிட்டால் பலருக்கும் கும்பி பாகம் தான். அந்த வகையில் இந்திய முறைப்படி செய்த, உணவுகளை சாப்பிட்டுவிட்டு ஆஸ்திரேலிய சிறுமி ஒருவர் கொடுத்த ரியாக்ஷன் தான் தற்போது பலரையும் ஈர்த்திருக்கிறது.

ரேச்சல் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள இந்த வீடியோவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறுமி ஒருவர் இந்திய முறைப்படி சமைக்கப்பட்ட கடாய் சிக்கன் மட்டும் மாம்பழ குல்பி போன்றவற்றை  சாப்பிடுகிறார். அப்போது அந்த சிறுமி மிகுந்த ஆர்வத்துடன் உணவுகளை டேஸ்ட் செய்கிறார். கடைசியாக சீரகத்தை அந்த உணவக உரிமையாளர்கள் கொடுக்க, துறுதுறுவென இருந்த சிறுமி அதை சாப்பிட்டுவிட்டு பற்களை கடித்துக்கொண்டு கண்ணை மூடிக்கொள்ளும் ரியாக்ஷனுக்கு ஹார்டின்களை அள்ளி வீசிவருக்கின்றனர் நெட்டிசங்கள்.இந்திய முறைப்படி தயாரித்த சிக்கன் மற்றும் மாம்பழ குல்பியை சாப்பிட்டு ஆஸ்திரேலிய சிறுமி கொடுத்த இந்த ரியாக்ஷன் வீடியோவை இதுவரை  1 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுள்ளனர்.

Categories

Tech |