தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் சிவாஜி. ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதைத் தொடர்ந்து சிவாஜி திரைப்படம் ரஜினிகாந்திற்கு திரையுலகில் முக்கிய ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், ஸ்ரேயா, சுமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் மாஸ், நகைச்சுவை, சமூக அக்கறை, கமர்ஷியல் போன்ற கதை அம்சங்களை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த திரைப்படம் மக்களின் மனதைக் கவர்ந்தது. இந்நிலையில் 2005ல் வெளியான சந்திரமுகி திரைப்பட வசூலை முறியடித்து, சிவாஜி திரைப்படம் 152 கோடி வரை வசூல் செய்துள்ளது . அது மட்டுமின்றி சினிமா திரையுலகில் முதன் முதலில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் சிவாஜி என்பது குறிப்பிடத்தக்கது.