விஷால்- ஆர்யாவின் எனிமி படத்தின் டீசர் புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் பின்னணி இசையை சாம் CS இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
10Million + Views in all 3 Languages combined in 24 Hours
Tamil – https://t.co/mqapBhssH1
Telugu – https://t.co/VePbJnrmcc
Hindi – https://t.co/F8r32eCwxT#EnemyTeaser #Enemy pic.twitter.com/Wdw7lr6ZR0— Vishal (@VishalKOfficial) July 25, 2021
சமீபத்தில் இந்த படத்தின் அதிரடியான டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எனிமி பட டீசர் வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் ரிலீசை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.