Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேற லெவல்…. “வெற்றிக்கு காரணம் இவங்க தான்”…. புகழ்ந்து தள்ளிய கேப்டன் ராகுல்..!!

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இவர்கள் தான் காரணம் என்று கேப்டன் கே.எல் ராகுல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியவில்லை. இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களில் சுருண்டு போனது.

இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 30.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. தவான் 113 பந்துகளில் 81 ரன்களும் (9 பவுண்டரி), சுப்மன் கில்  72 பந்துகளில் 82 ரன்களும் (10 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்திருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தீபக் சாஹர் பிரசித் கிருஷ்ணா, அச்சர் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.. இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் போட்டி முடிந்தபின் கேப்டன் கே.எல் ராகுல் பேசியதாவது, பல கிரிக்கெட் போட்டியில் விளையாடும் போது நிறைய காயங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதன்படி காயத்தினால் வெளியில் அமர்ந்திருந்தது மிகவும் கடினமாக காலமாக தான் இருந்தது. இருப்பினும் தற்போது மிகச் சிறப்பான முறையில் மீண்டு வந்திருப்பதாக உணர்கிறேன். இந்த போட்டியில் தனது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.. போட்டியின் தொடக்கத்திலேயே சரியான லைன் மட்டும் லென்த்தில் பந்தை வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினர். இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்களே காரணம்.

மேலும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளதால் மகிழ்ச்சி அடைகிறேன். ஓர் அணியாக நாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது அவசியம்.. அந்த வகையில் இந்திய அணி தற்போது மிகச் சிறப்பான நிலையில் இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Categories

Tech |