Categories
விவசாயம்

வேற லெவல் வேளாண் பட்ஜெட்…. இதோ முக்கிய அம்சங்கள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியது. அந்த வகையில்,

# சிறுதானியம் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தும்.

# பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் அரசின் பங்காக ரூபாய் 2,339 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடாக ரூபாய் 2,055 கோடி வழங்கப்பட்டுள்ளது.

# 7,500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

# மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் ரூபாய் 71 கோடியில் புதிதாக செயல்படுத்தப்படும்.

# நெல் ஜெயராமன் பெயரில் 200 ஏக்கரில் பாரம்பரியம் நெல் விதைகளை உற்பத்தி செய்து 20,000 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

# வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் துவங்க தலா ரூ.1லட்சம் வழங்கப்படும்.

#மரம் வளர்ப்புத் திட்டத்திற்காக வேளாண் பட்ஜெட்டில் ரூபாய் 12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

# கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தரும்புரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும்.

# மாவட்ட, மாநில அளவில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.

# இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூபாய் 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 2 மண்டலங்கள் உருவாக்கப்படும்.

# தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

# மயிலாடுதுறையில் ரூபாய் 75 லட்சத்தில் மண் பரிசோதனைக்கூடம் அமைக்கப்படும்.

# திராவிட ஆதி விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

# கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தப்படும்.

# கரும்பு சாகுபடி ஊக்குவிப்புக்காக ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# தனியார் பங்களிப்புடன் தேனி, கோவை, கன்னியாகுமரியில் மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைக்கப்படும்.

# தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூபாய் 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜட்கோவிற்கு ரூபாய் 5,157.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

#  ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக ரூபாய் 1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெறும்.

# விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச் செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லவும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூபாய் 604.73 கோடி செலவில் 2,750 கி.மீ., நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்படும்.

# வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள் குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளுக்கு ரூபாய் 30.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) வாயிலாக சிறிய விவசாயம் சார்ந்த தொழில்கள் துவங்க ரூபாய் 1.5 கோடி வரை மூலதன மானியம்.

# வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலமாக தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூபாய் 1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதைக் கண்காணித்தல்

# வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூபாய் 33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |