நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சன நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
190 Countries 17 Languages 1 #Suruli #JagameThandhiramOnNetflix from June 18… pic.twitter.com/AzSuPttweh
— karthik subbaraj (@karthiksubbaraj) June 15, 2021
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வருகிற ஜூன் 18-ஆம் தேதி இந்த படம் நெட்பிலிக்ஸில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த படம் 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.