Categories
உலக செய்திகள்

வேற லெவல்!!…. 84 வயதில் exam எழுதும் முதியவர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

முதியவர் ஒருவர்  தான் பள்ளி படிக்கும்போது தோல்வியடைந்த பாடத்  தேர்வை எழுதுகிறார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள சிசெஸ்டர்  நகரில் அமைந்துள்ள ஒரு முதியோர் இல்லத்தில் எர்னி பஃபெட்   என்ற 84 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் தான் பள்ளி படிக்கும் போது இயற்பியல் பாடத்தில் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 3 முறை தேர்வு எழுதிய அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் அவர் அந்த முயற்சியை கைவிட்டு விட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு தான் தோல்வியடைந்த பாடத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

அதற்காக அவர் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். இவரின் இந்த முயற்சிக்கு முதியோர் இல்லத்தின் மேலாளரான ரையான்  முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் இயற்பியல் தேர்வில் பங்கேற்று நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என அவர்  உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |