Categories
உலக செய்திகள்

வேற லெவல்…. 9 மருத்துவமனைகள், 549 நாட்கள்…. கொரோனாவிடம் இருந்து போராடி மீண்ட நபர்….!!!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9 மருத்துவமனைகளில் 549 நாட்களுக்கு பிறகு குணமைடைந்து வீடு திரும்பி உள்ளார். 

சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க நாட்டின் நியூமெக்சிகோ மாநிலம் ரோஸ்வெல் நகரைச் சேர்ந்தவர் டானல் ஹண்டர் (வயது 43) . இவருக்கு அக்டோபர் மாதம் 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இருப்பினும் அவரின் உடல்நிலை மோசமாகவே இருந்ததால் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார். இவர் மொத்தம் 9 மருத்துவமனைகளில் 549 நாட்கள் அதாவது ஒன்றரை மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஹண்டர் ஒன்றரை வருடமாக தனது குடும்பத்தினரையும் சந்திக்க வில்லை. அவர்களும் மருத்துவமனைக்கு வெளியே நின்றவாறு கண்ணாடி ஜன்னல் வழியாக அவரை பார்த்து சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு டானல் ஹண்டர் தனது குடும்பத்தை சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |