Categories
கிரிக்கெட் விளையாட்டு

வேற வழியே இல்ல!…. தொடர்ந்து பவுன்சர் வீச இதுதான் காரணம்…. பிரசித் அதிரடி பேட்டி….!!!!

நேற்று முன்தினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா வெற்றிக்கு முக்கிய காரணம். ஏனென்றால் அவர் தான் ஒரு பந்தை கூட ஏத்தி போடாமல் ஷார்ட் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை மிரள வைத்தார். இதனால் இவரது பந்தை தொடவே பேட்ஸ்மேன்கள் பயந்தனர்.

பிரசித் கிருஷ்ணா 9 ஓவர்கள் வீசிய நிலையில் மூன்று மெய்டன்கள் உட்பட 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இவருக்கு “ஆட்ட நாயகன் விருது” வழங்கப்பட்டது. இந்த நிலையில் பிரஷித் கிருஷ்ணா அனைத்து பந்துகளையும் பவுன்சராக வீசியது குறித்து பேசியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரசித் கிருஷ்ணா, போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் “என்னுடைய விருப்பம் இதேபோல் தொடர்ந்து பந்துவீச வேண்டும் என்பது தான்.

நான் பேட்டிங் விளையாட களமிறங்கிய போது பிட்ச் இன்னும் வேகத்திற்கு ஏற்றதாக தான் உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். இருப்பினும் வேறு வேறு லெந்தில் பந்து போட்டு பிட்சை சோதனை செய்ய நினைத்தேன். ஆனால் இலக்கு குறைவாக இருந்ததால் வேறுவழி இல்லாமல் ஆரம்பம் முதலே குட் லெந்த் மற்றும் பவுன்சர் பந்துகளை வீச வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. எனவே அதே இடத்தில் தொடர்ந்து பந்துவீச வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |