தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று காலை தஞ்சையில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு நல திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டவும், திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் முதலஅமைச்சர் முக.ஸ்டாலின், மன்னார்புரம் விருந்தினர் மாளிகையிலிருந்து மாலை புறப்பட்டு விழா நடக்கும் கேர் கல்லூரி வளாகத்திற்கு மாலை 5.25 மணிக்கு வந்தார்.
இதனிடையில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டிலும் ஒமிக்ரான் அச்சம் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் இதுபோன்று கூட்டங்களை நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியபோது, திருச்சியில் மாநாடு போன்ற கூட்டத்தை கூட்டி முதல்வர் உரையாற்றி இருப்பது வேலியே பயிரை மேய்வது போன்று இருக்கிறது. முதலமைச்சர் போட்ட கட்டுப்பாடுகளை அவரே மீறி இருப்பது வேதனைக்குரியது. மேலும் முதலமைச்சரே இதுபோன்று கட்டுப்பாடுகளை மீறினால் மக்கள் எப்படி மீறாமல் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.