Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலுவின் மனவேதனை முடிவால்…! ஓசூர் அருகே ரயில்நிலையம் பரபரப்பு …!!

ஓசூர் அருகே ஓடும் ரயிலின்  முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள சின்ன வேடகானப்பள்ளி கிராமத்தில் வசிக்கும்  வெங்கடசாமியின் மகன் வேலு. 20 வயதான இவர் கடந்த சில மாதங்களாகவே மனரீதியான பாதிப்பில் இருந்ததால்  அவரது பெற்றோர்கள் டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார்கள்.  இந்நிலையில் நேற்று முன்தினம்  கிராமத்திலிருந்து வேலுவும் அவரது சகோதரர் பிரபு, நண்பர் மணி ஆகிய மூவரும்  வெளியே சென்றனர். அப்பொழுது ஓசூரில் இருந்து கொத்தப்பள்ளி வழியாக சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த ஓடும் ரயிலின் முன்பு வேலு பாய்ந்து விட்டார்.

அதனால் அவரது இடது கை துண்டாகி, உடலில் படுகாயம் ஏற்பட்டது.  இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பும் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால் வேலு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்.  இளைஞர்  ஓடும் ரயிலின் முன்பு  பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து ஓசூர் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |