Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் “நான் முதல்வன் நிகழ்ச்சி”…. மாவட்ட ஆட்சியர் கையேடு வெளியிடு….!!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கான “நான் முதல்வன்” என்ற நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி வேலூர் மாவட்ட காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களுக்கான கையேட்டை வெளியிட்டார்.

இதில் டி.எம். கதிர் ஆனந்த், எம்.பி., வி.ஐ.டி. பல்கலைக்கழக துணை தலைவர் ஜி.வி. செல்வம், அமலு விஜயன், எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா, வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விமலா சீனிவாசன், சீனிவாசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் 1,300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வங்கி, அரசு, விவசாயம், தொலை தொடர்பு, சட்டம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் போன்ற துறைகளை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சி முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்து நன்றி கூறினார்.

Categories

Tech |