Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இருந்த தொழிலாளியின் பிணம்”… போலீசார் விசாரணை…!!!

வேலூரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டை லால்சிங் குமந்தன் தெருவை சேர்ந்த 55 வயதுடைய சந்தானம் என்ற தொழிலாளி தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றார். இவர் சென்ற 6ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஓட்டலில் டிபன் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்ற அவர், அதற்குப் பின்னர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டு பூட்டிய நிலையிலேயே இருந்தது.

இந்நிலையில் திடீரென அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கதவை திறக்க முயன்றனர். ஆனால் உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்ததால் திறக்க முடியவில்லை. பின்னர் காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சந்தானம் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரின் உடலை மீட்டு போலீஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இவர் 2 நாட்களுக்கு முன்பாக உயிர் இழந்திருக்கலாம் எனவும் மாரடைப்பால் உயிரிழந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.

Categories

Tech |