Categories
மாநில செய்திகள்

வேலூரில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த வன்கொடுமை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

காட்பாடியில் பெண் மருத்துவரை ஒரு கும்பல் மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி என்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரே கடந்த சில தினங்களுக்கு முன் இரவில் 2 வாலிபர்கள் போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் இருவரும் இதற்கு முன் வழிப்பறி செய்த பணத்தை, பங்கிடுவதில் ஏதோ தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக தெரியவந்துள்ளது. மேலும் முழு போதையில் இருந்த 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனை பெண் டாக்டரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு காவல்துறையினர் மிகவும் அதிர்ச்சியுற்று, மேலும் விசாரித்ததில் இளம் சிறுவர் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் வேலூர் எஸ்பி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் புகார் மனு ஒன்று வந்துள்ளது. அந்த புகாரில் ஒரு பெண்ணும் அவருடைய ஆண் நண்பரும் சேர்ந்து  கடந்த 16 ஆம் தேதி அன்று இரவில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்குக்கு இரவு காட்சி பார்க்க சென்றுள்ளனர். அப்போது படம் முடிந்து நள்ளிரவு 1 மணியளவில், தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியுள்ளனர்.

ஆனால் அந்த ஆட்டோ மருத்துவமனையை நோக்கி செல்லாமல் திசைமாற்றி சென்றதாகவும், மேலும் நாங்கள் அதை தட்டிக் கேட்ட போது அந்த ஆட்டோவில் உள்ள 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து தங்களிடமிருந்து செல்போன்கள், பணம் சுமார் 40,000 உட்பட 2 பவுன் தங்க நகையை  மிரட்டி அபகரித்துக்கொண்டு உள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் அந்த நபர்கள் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைதான இளம் சிறுவர் உட்பட நான்கு பேரிடம் விசாரணை நடத்தியதில், அவர்களும் உண்மையை கூறி ஒத்துக்கொண்டனர்.மேலும்    கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய  ஆட்டோவையும் பறிமுதல் செய்து எஸ்.பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |