Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் மக்களுக்கு அதிர்ச்சி…. உத்தரவு போட்டு அதிரடி நடவடிக்கை …!!

வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக 45 கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களில் துறை வாரியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கும் கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியானதில், அங்குள்ள 45 கடைகளில் பணியாற்றக் கூடிய பொருட்கள் பணியாளர்கள் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இதனால் கொரோனா பாதித்த 45 கடைகளும் உடனடியாக மூடப்பட்டு தற்போது கொரோனா பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரேஷன்கடை ஊழியர்களுக்கு நோய்த்தொற்று  உறுதியாகியுள்ளதால் அந்த பகுதியில் உள்ள கடையில் உள்ள பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சம்மந்தப்பட்ட கடைகளில் பொருட்கள் வாங்கிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Categories

Tech |