Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் ஊரக உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணி இடப்பங்கீடு பட்டியல் வெளியீடு!!

வேலூர் மாவட்டத்திற்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இடப்பங்கீடு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன..

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு விவரங்களை வேலூரில் அறிவித்தார். அவர் கூறியதாவது, வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களில் 1 மட்டும் காங்கிரஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, உள்ளாட்சி தேர்தலில் பேர்ணாம்பட்டு மாவட்ட கவுன்சிலர் இடம் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 இடங்களில் திமுக போட்டியிடும்.

வேலூரிலுள்ள 7 ஒன்றியங்களிலும், மொத்தம் 138 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. 138 ஒன்றிய குழு உறுப்பினர்களில் காங்கிரஸ் 3, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிக்கு  தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 132 இடங்களில் திமுக போட்டியிடும் என்று தெரிவித்தார்.

 

Categories

Tech |