வேலூரில் அதிதிராவிடர்களுக்கு தனி மயானம் அமைத்தது தொடர்பாக உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
வேலூர் நாராயணபுரத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவரை மயானத்துக்கு கொண்டு செல்லும் பாதை இல்லாததால் அவரது உடலை மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி மயானத்திற்கு கொண்டு சென்றனர். சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து மனித உரிமை ஆணையம் வழக்கை எடுத்துக் கொண்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞரான கார்த்திகேயன் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அந்த அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் தாசிலாதார் தாக்கல் செய்த அறிக்கையில் ஆதிதிராவிடருக்கு தனி மயானம் அமைத்துக் கொடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டதை கண்ட உயர்நீதிமன்றம் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.
அதில் , ஆதிதிராவிடர்களுக்கென்று தனி அரசு மருத்துவமனை , காவல் நிலையம் கிடையாது. தனி மையானம் அரசு அமைத்துக் கொடுப்பது அரசே ஜாதியை ஊக்குவிப்பதாக இல்லையா ? என்று கேள்வியை எழுப்பிய நீதிமன்றம் தெருக்களில் ஜாதியை ஒழிக்க அரசாணை பிறப்பித்த அரசாங்கம் மாணவர்கள் படிக்கின்ற பள்ளிகளில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி என்ற வார்த்தைகளை நீக்க முடிய வில்லை என்ற வேதனையை தெரிவித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் 20ஆம் தேதி அறிக்கை அளிக்கக்கு வேண்டுயமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.