வேலூர் மாநகருக்குள் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார்.
வேலூர் மாநகருக்குள் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் செய்து குறிப்புபில் கூறியுள்ளதாவது, வேலூர் மாநகரில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன நெரிசலை தடுக்கும் வகையில் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவது இன்று முதல் தடை செய்யப்படுகின்றது.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வேலூர் மாநகருக்குள் நுழையும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் வேலூர் கிரீன் சர்க்கிள் சாலையிலிருந்து அப்துல்லாபுரம் விமான நிலையம் வழியாக ஊசூர், அரியூர், சாத்து மதுரை திருவண்ணாமலை வழியாக செல்ல வேண்டும். வேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் பழைய காட்பாடி சாலை உள்ளிட்டவற்றில் கனரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகின்றது. மேலும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழக்கமான பாதையில் கனரக வாகனங்கள் செல்லலாம் என கூறப்பட்டிருக்கின்றது.