Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூர் மாவட்டத்தில் காவலர்களுக்கு வழங்கப்பட்ட 13 ரோந்து வாகனங்கள்”…!!!

வேலூர் மாவட்டத்தில் காவலர்களுக்கு 13 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அதிகரித்துவரும் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கூடுதலாக சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஐந்து கார்கள் உட்பட 47 ரோந்து வாகனங்கள் இருந்த நிலையில் நேற்று கூடுதலாக 13 மோட்டார் சைக்கிள்கள் காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதை போலீஸ் சூப்பிரண்ட் ராஜேஷ் கண்ணன் தொடங்கிவைத்த நிலையில் கூடுதலாக 15 வாகனங்கள் வாங்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக கூறியுள்ளனர்.

ரோந்து பணிக்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் அலாரம் முதலிய வசதிகள் இருக்கின்றது. இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வாகனம் எங்கு இருக்கின்றது என்பதை அறிய முடியும். லத்தேரி, பனமடங்கி, பரதராமி உள்ளிட்ட காவல் நிலைய பகுதிகளில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் கலந்துகொண்ட நிலையில் எந்த இடத்திலாவது அசம்பாவிதம், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ரோந்து வாகனங்களில் காவலரை உடனடியாக அனுப்பி வைத்து பிரச்சனை சரி செய்யப்படும் என போலீசார் கூறினார்.

Categories

Tech |