அரியலூர் மாவட்டத்தில் முதலாளியை வேலைக்காரன் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள அண்ணா நகர் பகுதியில் யுவான் பெர்னாண்டர் என்பவர் வசித்து வந்தார். சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் யுவான் பெர்னாண்டர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யுவான் பெர்னாண்டர் வீட்டில் சிவகுமார் 2 ஆயிரத்து 70 ரூபாயை திருடியதை யுவான் பெர்னாண்டர் பார்த்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த யுவான் பெர்னாண்டர் காவல் நிலையத்தில் சிவக்குமாரின் மீது புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் சிவக்குமாரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து சிவக்குமார் ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த சிவக்குமார் யுவான் பெர்னாண்டரை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவகுமார், யுவான் பெர்னாண்டரை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதன் காரணமாக சங்கர் நகர் காவல் துறையினர் சிவகுமாரை கைது செய்து செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கொலை செய்த குற்றத்துக்காக சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.