தங்க நகைகளுக்கு தாய், மகள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சௌடேஸ்வரி லே-அவுட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் சன்னவீர சுவாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்கின்ற மனைவியும், ரத்தன்யா என்ற நான்கு வயது மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை சன்னவீர சுவாமி வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவரது மனைவியும் மகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அவர் வேலைக்குச் சென்ற சிறிது நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் நுழைந்து யமுனாவையும் அவரது மகளையும் கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் வீட்டில் இருந்த தங்க நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
யமுனாவின் சகோதரி, எதார்த்தமாக வீட்டிற்கு சென்ற பொழுது தாயும் மகளும் உயர்ந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சன்னவீர சுவாமிக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.