பெங்களூரில் உள்ள கூடலூர் பகுதியில் பரமசிவமூர்த்தி (47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயதான தந்தை மற்றும் தாய் இருக்கின்றனர். அவர்களை கவனித்துக் கொள்வதற்காகவும், வீட்டு வேலை செய்வதற்காகவும் பெண் வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதனால் வில்சன் கார்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் பரமசிவமூர்த்தி வேலைக்கார பெண் வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த நிறுவனமும் 21 வயது இளம்பெண்ணை அனுப்பி வைத்துள்ளது. அதன்படி அந்த இளம் பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பரமசிவமூர்த்தி அந்த இளம் பெண் வீட்டில் தனியாக இருக்கும்போது அவரை கற்பழித்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமும், அல்லது வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என அந்த இளம் பெண்ணை அவர் மிரட்டியுள்ளார். இதனால் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் அந்த இளம் பெண் கூறாமல் இருந்துள்ளார். அதன் பின் தன்னை வேலைக்கு அனுப்பிய நிறுவனத்தின் அதிகாரியை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் பற்றி இளம்பெண் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரி உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பரமசிவமூர்த்தியை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.