காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள காவல்காரன்பட்டி கிழக்கு தெருவில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற சௌந்தர்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சௌந்தர்யாவின் தாய் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.