Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அனிதா கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனிதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |