இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் மீனாட்சியம்மன் கோவில் தெருவில் லட்சுமணன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவருக்கு ரோசி(23) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. நேற்று வழக்கம் போல லட்சுமணன் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரோசி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த லட்சுமணன் தனது மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரோசி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.