Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொண்ணு(24) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொண்ணு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கார்த்திகேயன் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |