மாயமான இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகல்குழி கிராமத்தில் ரேவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா(26) என்ற தங்கை உள்ளார். இவர் கைத்தறி நெசவாளர் நல வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட ரேணுகா மீண்டும் திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ரேணுகாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் ரேவதி தனது தங்கையை காணவில்லை என ஜெயம்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரேணுகாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.