வீட்டில் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழனிசாமி நகரில் கனகவேல்-சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு 2 பேரும் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.