ஊராட்சி ஒன்றிய அலுவலர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள குறிஞ்சி நகர் பகுதியில் முரளி-துர்காதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவரை எழுத்தாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 கிராம் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முரளி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.