வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சி.என் கிராமம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர் தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று முத்துவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.