Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தாய்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள தளவாய்பட்டி கிராமத்தில் கண்மணி என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சௌமியா(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி எட்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கண்மணி வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த சௌமியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த கண்மணி தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |