Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தாய்…. பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மகாலட்சுமி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நதியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நதியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |